யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகர் பகுதி ஒன்றில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post