யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வருட காலத்தில் பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 6 வீடுகளில் திருட்டுக்களில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post