யாழ்ப்பாணம், பண்ணைக் கடற்கரைப் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலுக்குச் சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பது தொடர்பாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தார்.
Discussion about this post