யாழ்ப்பாணம் நகர் பகுதியில் சைக்கிள்கள் திருடிய குற்றச்சாட்டில் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 6 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், சைக்கிள்களைப் பறிகொடுத்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் நடந்த சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post