கோப்பாய் இராசவீதியில் உள்ள வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த 17 வயதுச் சிறுமியை வீடியோ பதிவு செய்த இளைஞர் ஒருவர் அந்தப் பகுதி மக்களால் நன்றாகக் கவனிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அராலி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரே கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவரது மூத்த சகோதரன் இராசவீதி பகுதியில் திருமணம் செய்திருந்த நிலையில், இந்த இளைஞர் அங்கு வந்திருந்தார் என்று கூறப்படுகின்றது.
குளித்துக் கொண்டிருந்த சிறுமி தன்னை வீடியோ பதிவு செய்வதை அவதானித்து சத்தமிட்டதை அடுத்து, அந்தப் பகுதி மக்கள் இளைஞரைப் பிடித்து நன்றாகக் கவனித்துள்ளனர். அதன்பின்னர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post