கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் நேற்றுவரை 3 ஆயிரத்து 310 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்தக் குழுவில் இருந்து ஆயிரத்து 182 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், ஏனைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மே மாதம் 9 ஆம் திகதி மட்டும் நாடளாவிய ரீதியில் எண்ணூற்றி ஐம்பத்தெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும், அந்தச் சம்பவங்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post