இளம் தாய் ஒருவர் கணவரால் கோடரியால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. நுவரெலியா, சந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவுத் தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சத்தியவாணி என்ற 24 வயதுப் பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
பெண்ணின் கணவர் தோட்டத்தில் தொழில் செய்வதுடன், பகுதி நேர வருமானத்துக்காக முச்சக்கர வண்டி செலுத்தி வருகின்றார்.
நேற்று இரவு வீட்டுக்கு வந்த கணவருக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் கணவர் கோடரியால் மனைவியைத் தாக்கியுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், நுவரெலியாப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post