புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட முடியும் என்றும் அவர்களின் பாதுகாப்பை தமது அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்கள் இங்கு முதலீடு செய்ய முயன்று அவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் இதர பிரச்சினைகள் ஏற்பட்டு முதலீட்டைத் தவிர்த்திருந்தால் இப்போது அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
வடக்கு – கிழக்கு அபிவிருத்திகான விசேட நிதியம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனையை ஒன்றை முன்வைத்திருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
அதேவேளை, கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் முதலீட செய்ய முயன்ற புலம்பெயர் தமிழர்கள் பலர் நெருக்கடிகளைச் சந்தித்தனர் என்றுகூறப்படுகின்றது.
பாதுகாப்புத் தரப்பினரின் விசாரணை மற்றும் அனுமதிகளைப் பெறுவதில் இழுத்தடிப்புக்கள் காரணமாக அவர்கள் தங்கள் முதலீட்டு முயற்சிகளில் இருந்து பின்வாங்கியிருந்தனர் என்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post