இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பொலிஸார் அறிவித்துள்ள நிலையில் போராட்டக்காரர்கள் சில கூடாரங்களை அகற்றியுள்ளனர்.
இந்த கூடாரங்களை அகற்றும் பணி நேற்றுமுன்தினம் இரவும், நேற்றும் மேற்கொள்ளப்பட்டதுடன், நேற்றுப் பிற்பகல் சில கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டனர்.
இதேவேளை, இது வரை போராட்ட பகுதியில் தங்கி முதலுதவி அளித்து வந்த புனித ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களும் நேற்றுப பிற்பகல் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை தடுக்குமாறு கோரி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post