ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இன்று இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலால் நாட்டின் இயல்பு நிலைமை முற்றாக முடங்கியுள்ளது.
இந்த ஹர்த்தாலில 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ள நிலையில், நாட்டின் பெரும்பாலான அரச, தனியார் துறைகள் முடங்கியுள்ளன.
போக்குவரத்து சேவைகள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
அரச, அரை அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பெரும்பாலான செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.
வீதிகளிலும் வாகனங்களின் போக்குவரத்து வழமையை விடவும் குறைவாகவே காணப்பட்டது.
அதேவேளை, ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்து கொழும்பிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மக்கள் இன்று போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனால் சில இடங்களில் பதற்றமான நிலைமையும் காணப்பட்டது.
Discussion about this post