7ஆம் வருட மாணவனை பிரம்பால் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் பாடசாலையின் ஆசிரியரான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையிலான சண்டையின் அடிப்படையில், மாணவர் ஒருவரின் முதுகு, தோள்கள் மற்றும் கைகளில் பல தடவைகள் பிரம்பு மூலம் தாக்கியதாக மாணவன் தாயுடன் பேருவளை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
பாடசாலைக்கு சென்று பிரதி அதிபர் மற்றும் ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்றுக்கொண்ட பேருவளை காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர், ஒன்றாகப் படிக்கும் அதே வயதுடைய மற்றுமொரு மாணவருடன், பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட சண்டையின் விளைவாக 12 வயது மாணவன் தாக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பேருவளை காவல்துறையினர் சந்தேக நபரான ஆசிரியரிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளதுடன், தற்போது குறித்த மாணவன் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பேருவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நவசி வத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேக நபர் பயாகல காவல்துறை பிரிவில் வசித்து வருவதுடன் அந்த பாடசாலையின் பிள்ளைகளுக்கு கற்பிக்க செல்வதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் களுத்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Discussion about this post