பருத்தித்துறை, கரவெட்டியைச் சேர்ந்த 18 வயதுச் சிறுமி உறக்கத்திலேயே உயிரிழந்த நிலையில், சிறுமி 2 மாதக் கர்ப்பம் என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கரவெட்டியைச் சேர்ந்த 18 வயதுச் சிறுமி ஒருவர் உறக்கத்துக்குச் சென்ற நிலையில் சுயநினைவற்ற நிலையில பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்கள். சிறுமியின் உடல் இறப்பு விசாரணைகளின் பின்னர் உடல் கூறாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சட்ட மருத்துவ அதிகாரி க.வாசுதேவ முன்னிலையில் உடல் கூறாய்வு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உடல் கூறாய்வு பரிசோதனையில் சிறுமி 2 மாதக் கர்ப்பமாக உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக சிறுமியின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post