தம்மை நாடு கடத்தும் உத்தரவை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி பிரிட்டன் பெண் கெய்லி பிரேசர் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
மருத்துவ விசாவில் இலங்கை வந்த நிலையில், காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்து காணொளி வெளியிட்ட கெய்லி பிரேசர் என்ற பிரிட்டன் பெண்ணின் விசாவை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் இரத்துச் செய்ததுடன், இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
எவ்வாறாயினும், தம்மை நாடு கடத்துவதற்கு எதிரான தீர்மானத்தை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி இந்த மனுவை குறித்த பிரிட்டன் பெண் தாக்கல் செய்திருந்தார்.
Discussion about this post