மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தியோர் மீது நேற்று அரசாங்க ஆதரவுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில், அதை அனுமதிக்கும் வகையில் நடந்து கொண்டார் என்று தேசபந்து தென்னக்கோன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
தேசபந்து தென்னக்கோன், மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் காலி முகத் திடலுக்குள் நுழைந்தபோது, நாடாளுமன்ற சாந்த பண்டாரவுடன் உரையாடியவாறு செல்லும் புகைப்படம் இன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.
இன்று அவர் கொம்பனித் தெரிவில் மஹிந்த ஆதரவாளர்களை ஏற்றி வந்த பஸ்கள் தள்ளப்பட்டுள்ள குளத்தைப் பார்க்கச் சென்றபோது அங்கு கூடிய மக்கள் குழு அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
Discussion about this post