நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்தவர் நேற்று ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர், ஐந்து மாடி பகுதியில் சந்தேகநபர் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார் என்றும், அவரிடம் இருந்து 80 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
2021ஆம் ஆண்டு ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். மல்லாகம் நீதிமன்றில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சந்தேகநபருக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.
Discussion about this post