தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருத்துக் களஞ்சியத்தில் இன்று தீ விபத்து நடந்த நிலையில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
இன்று மதியம் 2 மணியளவில் களஞ்சியத்தில் தீ பரவியது. தீப் பரவல் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் மக்களின் பெரும் போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்துக்கு மின்சார ஒழுக்கே காரணம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்தத் தீ விபத்தால் களஞ்சியத்தில் இருந்த மருந்துப் பொருள்கள் அழிவடைந்துள்ளன என்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் தற்போது மருந்து வகைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலேயே, மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post