தமிழக அரசின் உதவித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ள அரிசி இன்று காலை யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வைத்து பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
50 கிலோ கிராம் பொதிகளாக 9 ஆயிரம் அரிசிப் பொதிகள் இன்று கொண்டுவரப்படவுள்ளன. பிரதேச செயலாளர்கள் தங்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட பொருள்களை யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு உரிய நேரத்துக்குச் சென்று சரிபார்த்து பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு 50 கிலோகிராம் எடையுடைய 200 பொதிகளும், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு 50 கிலோகிராம் எடையுடைய 927 பொதிகளும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்கு 50 கிலோகிராம் எடையுடைய 700 பொதிகளும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு 50 கிலோகிராம் எடையுடைய 400 பொதிகளும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு 50 கிலோகிராம் எடையுடைய ஆயிரத்து 120 பொதிகளும், சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்கு 50 கிலோகிராம் எடையுடைய ஆயிரத்து 300 பொதிகளும், உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கு 50 கிலோகிராம் எடையுடைய 750 பொதிகளும், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்கு 50 கிலோகிராம் எடையுடைய ஆயிரத்து 300 பொதிகளும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்கு 50 கிலோகிராம் எடையுடைய 860 பொதிகளும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு 50 கிலோகிராம் எடையுடைய 900 பொதிகளும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்கு 50 கிலோகிராம் எடையுடைய 413 பொதிகளும் வழங்கப்படவுள்ளன.
Discussion about this post