இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்று காலை கடல் மார்க்கமாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் தவிக்கின்றனர் என்று தகவல் கிடைத்ததை அடுத்து தமிழக மரைன் பொலிஸார் படகில் சென்று அவர்களைத் தனுஷ்கோடி அழைத்து வந்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.
Discussion about this post