ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்கில் நாளை முதல் பெரும் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, இலங்கையின் சரித்திரத்தில் இதுவரை கண்டிராத அளவு பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி கண்டியில் நாளை ஆரம்பமாகும் என்று தெரிவித்தார்.
தலதா மாளிகையில் நடைபெறும் வழிபாடுகளின் பின்னர் பேரணி ஆரம்பமாகும் என்றும், எதிர்வரும் முதலாம் திகதி பேரணி கொழும்பை அடையும் என்று அவர் கூறினார்.
அதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. காலிமுகத் திடலிலும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post