கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது நாளாந்தம் கொரோனாத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை 10 மடங்கால் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் நான்காவது டோஸ் பெறாவிட்டால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அதேவேளை நேற்று முன்தினம் சிறிலங்காவில் 161 கொரோனாத் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம் தற்போது நாளாந்தம் கொரோனாத் தொற்றுடன் தொடர்புடைய உயிரழிப்புகளும் பதிவாகி வருகின்றன.
Discussion about this post