9 ஆம் திகதியை போராட்ட தினமாக நினைவு கூர்வதற்கு நேற்றுப் பிற்பகல் காலி முகத்திடலுக்கு சென்ற செயற்பாட்டாளர்கள் சிலருக்கு பொலிஸார் இடையூறு விளைவித்தனர்.
அதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது. எனினும் பொலிஸாரின் தடையையும் மீறி அவர்கள் தீபங்கள் ஏந்தி போராட்டத்தை நினைவுகூர்ந்தனர்.
காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தின் வெற்றியையும் அதற்காக தம்மை அர்ப்பணித்தவர்களையும் நினைவுகூர்ந்து நினைவு தின நிகழ்வொன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செயற்பாட்டாளர்கள் சிலர் நேற்றுப் பிற்பகல் காலிமுகத்திடலில் ஒன்றுகூடிய போது, அங்கு வந்த பொலிஸார் ஒரு பகுதியில் மாத்திரம் நிகழ்வை மேற்கொள்ள முடியும் என்று அறிவுறுத்தினர். அதனால், அமைதியின்மை ஏற்பட்டது.
பின்னர் தேரர்கள் உள்ளிட்ட தரப்பினர் காலிமுகத்திடலுக்கு முன்பாகவுள்ள ஒரு இடத்தில் நினைவுகூரல் நிகழ்வை முன்னெடுத்தனர்.
சமய வழிபாடுகளும் இதன்போது இடம்பெற்றன. பொலிஸார் மீண்டும் தலையிட்டு அவர்களை அங்கிருந்து வௌியேற்றினர்.
அதன்பின்னர் போராட்டச் செயற்பாட்டாளர்கள் காலி முகத்திடலில் ஒரு பகுதிக்கு சென்று விளக்குகளை ஏற்றி போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்தோரை நினைவுகூர்ந்தனர்.
Discussion about this post