தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
இன்று நடந்திய விசேட ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, பொதுமக்களின் வேண்டுகோளின்படி கோத்தாபய வீடு செல்ல வேண்டும். நாங்கள் அதை ஆதரிப்போம். ராஜபக்சக்களுக்கு கீழ் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தனர்.
பொதுமக்கள் கோத்தாபயவை வீடு செல்லுமாறும், ராஜபக்சக்களை வீடு செல்லுமாறும் வலியுறுத்துகின்றனர். பொதுமக்களின் அழைப்புக்கு நாங்கள் துணை நிற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துடனும், பொதுமக்களின் அங்கீகாரத்துடன் மட்டுமே நாம் அரசாங்கத்தின் பொறுப்பை எடுப்போம் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post