பருத்தித்துறை, புலோலி, சிங்க நகரில் கிணறு ஒன்றில் இருந்து இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தீபாவளி தினமான நேற்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பருத்தித்துறை, பனங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான சுசேந்தகுமார் சசிகாந் மற்றும் மத்திகை உபயகதிர்காமத்தைச் சேர்ந்த 24 வயதான கணேசலிங்கம் லம்போசிகன் ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த இரு இளைஞர்களும் நேற்று அங்குள்ள தோட்டக் காணி ஒன்றில் விருந்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்த மற்றொருவரும் நீரில் மூழ்கியுள்ளார் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞர்களின் உடல்கள் பருத்தித்துறை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உடல்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post