கோறளைப்பற்று, கோரவெளி கட்டுப்பகுதியில் ரி-56 ரகத் துப்பாக்கி மற்றும் ரவைகள் என்பன நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இவை மீட்கப்பட்டுள்ளன.
ரி-56 ரகத் துப்பாக்கி ஒன்றும் 8 தோட்டாக்களும் இந்தத் தேடுதலில் மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post