ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் பிரதமராக செயற்பட்ட போது அவரது வீட்டிற்கு தீ வைத்து சேதப்படுத்திய சந்தேக நபர்கள் குழுவொன்றை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் நீண்ட விசாரணையின் பின்னர் இந்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோருகின்றனர்.
இந்த சந்தேக நபர்கள் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், அந்த நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Discussion about this post