வவுனியாவில் பெற்றோல் வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
வவுனியா நகர சபையில் சுகாதார ஊழியராகக் கடமையாற்றும் கொக்குவெளியைச் சேர்ந்த மாணிக்கம் செல்வகுமார் என்ற 44 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காகக் காத்திருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 5 நாள்களாக அங்கு எரிபொருள் விநியோகிக்கப்படாத நிலையில், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த நபர், அரச உத்தியோகத்தர்களுக்கான வரிசையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள கடைக்கு இளைப்பாறச் சென்றபோதே மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
Discussion about this post