சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் படகுடன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவினரால் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பிரிவினரால் இன்று காலை இந்தப் படகு இடைமறிக்கப்பட்டுள்ளது என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை மற்றும் பொதுவான நடவடிக்கைகளுக்கு அமைய, படகு இடைமறிக்கப்பட்டது என்று பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்படும் புகலிடக்கோரிக்கையாளர்களின் படகுகளை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று இடைமறிக்கப்பட்ட படகில் 15 இலங்கை பிரஜைகள் இருந்ததனர் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிறிஸ்மஸ் தீவின் மேற்கு கடற்பிராந்தியத்திலேயே இவர்கள் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post