பொதுமக்கள் வீதியில் இறங்கி எதிரொலிக்க முயற்சிக்கும் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறினால் தொழிற்சங்கங்கள் தொடர் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்துவது தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என்று அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
‘கோட்டா கோ ஹோம்’ என கோஷமிட்டபோது, முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்யும் போது ஜனாதிபதி பதவியில் இருந்தார்.
அமைச்சரவையில் பதவியேற்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அத்தகைய அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவையானது முன்னாள் அமைச்சர்களின் மாற்றமே எனவும், அதனால் தொழிற்சங்க கூட்டமைப்பு அரசாங்கத்தை கவிழ்க்கும் பிரசாரத்தை ஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post