சர்வக்கட்சி அரசில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அக்கட்சி பரிந்துரைத்துள்ளது.
இவர்களில் சிலர் ஏற்கனவே தற்காலிக அமைச்சர்கள் குழுவில் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர்.
இவர்களைத் தவிர எஸ்.எம். சந்திரசேன, பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி. ரத்னாயக்க ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆவணத்தில் மாத்தறை மாவட்ட தலைவர் டலஸ் அழகப்பெருமவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. சமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டை மாவட்ட தலைவராக இருந்தாலும் அவர் அமைச்சர் பதவியை ஏற்கமாட்டார்.
Discussion about this post