க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் முடிந்தவுடன் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் அரசாங்கம் தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்தாலும் மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் அவை வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தேசிய மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா, இலங்கைளின் தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகள் மீது ராஜபக்சக்கள் தலைமையிலான நிர்வாகம் பெரும் நிதிச் சுமைகளைச் சுமத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளின் பின்னர் தொடரவுள்ள போராட்டங்கள் மூலம் ராஜபக்சக்களின் எதேச்சதிகாரத் தலைமை முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post