நாடாளுமன்றம் செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பல்கலைக் கழக மாணவர்கள் மீது இன்றும் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் நாடாளுமன்ற வளாகததில் பல்கலைக் கழக மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நேற்று இரவு பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதனால் அங்கு பதற்ற நிலைமை காணப்பட்டது.
ஆயினும் மாணவர்கள் அங்கு இரவிரவாகப் போராட்டம நடத்தியதுடன், ஹோறா கோ கோம் என்ற புதிய போராட்டத் தளத்தையும் ஆரம்பித்திருந்தனர்.
இந்தநிலையில் இன்றும் மாணவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் அங்கு பதற்றமான நிலைமை காணப்படுகின்றது.
Discussion about this post