அரியவகை ஆந்தை ஒன்று பறக்க முடியாத நிலையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தச்சமடைந்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு வந்த ஆந்தையை, பொலிஸார் வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் கையளித்துள்ளனர்.
இந்த ஆந்தை வேறு பறவைகளின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கலாம் என்று வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்தை தற்போது சிகிச்சைக்காக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்திய நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post