எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிப்பதில் இருந்தும், சேதப்படுத்துவதிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பௌசர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் தற்போது தொடர்கின்றது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரான அஜித் ரோஹன தெரிவித்தார்.
பல்வேறு குழுக்களால் நேற்று பல எரிபொருள் பவுசர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ள என்று தெரிவித்துள்ள அவர், எரிபொருள் விநியோக பொறிமுறை சீர்குலைந்தால் அது மருந்து, உணவு மற்றும் இதர பொருள்களின் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் எரிபொருள் போக்குவரத் துக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொளள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post