இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஆரம்பமான அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்ட அவர், கடுகன்னாவையில் மக்கள் முன் ஆற்றிய உரையிலேயே இதனைத் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை, குற்றப்பிரேரணை என்பது வேறு ஆட்சிக் கவிழ்ப்பு என்பது வேறு என்று குறிப்பிட்ட அவர், காலிமுகத் திடல் போராட்டத்துக்கும், மக்களுக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்று தெரிவித்தார்.
நாட்டைப் பொறுப்பேற்பதற்குத் தயராக இருக்கின்றேன் என்று தெரிவித்த சஜித் பிரேமதாச, அது மக்களால் தரப்பட வேண்டியது என்று சுட்டிக்காட்டினார்.
இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஆதரவளிக்க மாட்டேன் என்று தெரிவித்த சஜித் பிரேமதாச, இடைக்கால அரசாங்கத்துக்குச் செல்வதை விடவும், எனது அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொள்வது இலகுவானது என்று குறிப்பிட்டார்.
Discussion about this post