தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டை மற்றையவர்களுக்குத் தெரியும்படியான இடத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார்.
வேறு எவரும் சட்டவிரோதமாக அதைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய, அதனை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய சுயவிவர அம்சத்தை நீக்குவதற்கான தெரிவும், மீண்டும் பதிவு செய்வதற்கான தெரிவும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீட்டைப் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
போலி QR குறியீடுகளை அடையாளம் காண தகவல் தொழில்நுட்ப முகவரகத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
Discussion about this post