டொலர் பற்றாகுறை காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் முடக்குமாறு
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கூறிள்ளார்.
ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அமைச்சர்
இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும்
தொழிற்சாலைகளுக்கான பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும்
கூறியுள்ளார்.
டொலர் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட
நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்
கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவிற்கான தனது விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் நிதி
அமைச்சர் மேலும் கூறினார்.
Discussion about this post