தமிழ் தேசிய உணர்வாளரும் திரையிசைக் கவிஞரமான புலமைப்பித்தன் இயற்கை ஏய்தினார் .
ஈழப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த கவிஞர் புலமைப்பித்தன் தேசியத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர் , பெருமையுடன் குறிப்பிடும் வகையில் ஈழப் போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்தவரும், எம்ஜிஆர் புலிகளுடன் நெருக்கமாகக் காரணமானவருமான தமிழீழப் பற்றாளர் கவிஞர் புலமைப்பித்தன் இன்று மறைந்துள்ளார்.
தமிழகத்தில் பிரபல திரைப்பட பாடலாசிரியராக அறியப்பட்டவர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர் நடித்த பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை நான்கு முறை பெற்றுள்ளார். எம்.ஜி.ஆர் உடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்ததால் அதிமுக உருவான போது, அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக புலமைப்பித்தன் அங்கம் வகித்தார்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் புலமைப்பித்தனின் வீட்டில் தங்கி பல்வேறு பணிகளை செய்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியல் இதழில் “தலைவர் தம்பி நான்”என்ற தலைப்பில் எம்ஜிஆர் பிரபாகரன் ஆகியோருடன் தனது தனிப்பட்ட அனுபவங்களையும் தன்னுடைய அரசியல் பயணத்தில் இவ்விரு ஆளுமைகளை கடந்துவந்த வரலாற்றுத் தருணங்களையும் இணைத்து புலவர் புலமைப்பித்தன் ஒரு பெருந்தொடர் வடித்தார்.
Discussion about this post