கொவிட் 19காரணமாக நாடு மூடக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த
குடும்பங்களுக்கு ரூபா 2000வழங்குவது தொடர்பான சுற்று நிருபத்திற்கு அமைய
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 5மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்
இன்றிலிருந்து குறித்த குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்கள் மூலம்
வழங்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் . இவ்வாறு
மாவட்டத்தில் மிகவும் வாழ்வாதாரத்தை இழந்த 2500பேருக்கு
வழங்குவதற்குநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இன்று இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் மாவட்ட அரசாங்கதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 3380 பேர்
தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.15 இறப்புக்கள் வரை மாவட்டத்தில்
இடம்பெற்றுள்ளது. மாவட்டத்தில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வருகிறது
மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
Discussion about this post