கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கோரோனா நோயாளி 07.11.2020 அடையாளம்
காணப்பட்ட நாள் தொடக்கம் கடந்த மாதம் 31 திகதி வரை 1400 தொற்றாளர்கள்
அடையாளம் காணப்பட்டுள்ளனர் ஆனால் இந்த மாதம் ( ஓகஸ்ட்) முதல் 16
நாட்களில் மாத்திரம் 1246 தொற்றாளர்கள்.அடையாளம் காணப்பட்டுள்ளனர் என
பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன்
தெரிவித்துள்ளார்.
நாட்டில் தீவிரமாகப் பரவிவரும் கொரனா தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும்
அதிதீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. என்பதனையே இது காட்டுகின்றது. 146000
சனத் தொகையை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் நாளாந்தம் 100 க்கு மேல்
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதிலும்
பரிசோதனைக்கு செல்கின்றவர்களிலேயே இந்த எண்ணிக்கையான தொற்றாளர்கள்
அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதுவொரு ஆபத்தான நிலைமை. ஆனால் பொது
மக்கள் இந்த ஆபத்தான நிலைமையினை உணர்ந்துகொண்டு செயற்பட வேண்டும்
கிளிநொச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் அதிகரித்து
வருகின்றனர். எனவே பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை
பின்பற்றி நடந்துகொள்ள வேணடும் என்பதோடு முடிந்தளவு வெளி நடமாட்டங்களை
பொறுப்புணர்ந்து தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post