சின்னத்திரையில் தற்போது தீயாய் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் குக் வித் கோமாளி சீசன் 5ல் பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் ஏற்பட்ட பிரச்சனைதான். இது பற்றி மணிமேகலை விளக்கம் கொடுத்திருந்தாலும் விஜய் டிவி பிரபலங்களில் பலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.
இதுகுறித்து பிரியங்கா, தன் பங்கிற்கு எந்தவொரு கருத்தும் கூறாமல் இருந்து வருகிறார். மேலும் விஜய் டிவி பிரபலங்களான குரேஷி, சுனிதா, நாஞ்சில் விஜயன் உள்ளிட்டவர்கள் தங்கள் கருத்துக்களை பிரியங்காவுக்கு ஆதரவாக பகிர்ந்து கொண்டனர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரியங்காவின் நெருங்கிய தோழனாக மாறிய நடன கலைஞர் அமீர் குக் வித் கோமாளி பிரச்சனை குறித்து பகிர்ந்துள்ளார்.
அவள் கூட இருக்கிறவர்களை கேட்டால் தெரியும், அவள் யாரையும் கீழத்தூக்கி மிதிக்கும் கேரக்டர் கிடையாது. ஒருவருக்கு திறமை இருப்பது தெரிந்தால் எந்தமட்டத்திற்கும் சென்று அவர்களை தூக்கிவிடுவாள் என்று பேசியிருந்தார்.
அதேபோல் அனிதா சம்பத், மணிமேகலைக்கு சப்போர்ட் செய்தார்களே அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று அமீரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அனிதா சம்பந்தின் கருத்து தனிப்பட்ட கருத்து என்று பார்க்கிறேன்.
அதை நான் வெளிப்படையாக சொல்கிறேன் தப்பா எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. அது தனிப்பட்ட விஷயம், அவங்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியாது. அதனால் அப்படி அவர் சொல்லி இருக்கலாம் என்று அமீர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post