பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தனது அறிமுக படத்திலேயே மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தனது இரண்டாவது படத்தையும் பூஜை போட்டு துவங்கினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த லெஜண்ட் தனது அரசியல் என்ட்ரி குறித்து பேசியுள்ளார்.
“மக்கள் நலன் மீது எனக்கு எப்போதுமே அக்கறை இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் அனைத்து தரப்பு மக்களுக்கு நல்லது செய்யமுடியும். காலம் நேரம் வந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். என் கொள்கைகளுக்கு உடன்பாடான கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவேன்” என கூறியுள்ளார்.
விஜய்யை தொடர்ந்து லெஜண்ட் சரவணனும் அரசியல் என்ட்ரியா என நெட்டிசன்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
Discussion about this post