இந்தியாவின் (India) வடக்கு பகுதி மற்றும் பாகிஸ்தான் (Pakistan), ஆப்கானிஸ்தானின் (Afghanistan) சில பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலநடுக்கமானது இன்று (11.09.2024) பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி (Delhi), உத்தரபிரதேசம் (Uttar Pradesh), ஹரியானா (Haryana), பஞ்சாப் (Punjab), ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) ஆகிய மாநிலங்களில் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புவியியல் ஆராய்ச்சிஜேர்மன் (Germany) புவியியல் ஆராய்ச்சி மையத்தின் (GFZ) படி, ரிக்டர் அளவுகோலில் 5.8 அளவுள்ள நிலநடுக்கம் மதியம் 12:58 மணியளவில் பாகிஸ்தானை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் (Islamabad) உட்பட நாட்டின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்கவ மாகாணங்கள் மற்றும் மத்திய தலைநகர் பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post