கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கோரி பாரியளவில் போரட்டம் வெடித்துள்ளது.கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்திருந்தார்.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றி வரும் சஞ்சய் ராய் (Sanjay Roy) மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் (Sandeep Ghosh)ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முறையான நடவடிக்கைகள்
இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியும் மற்றும் தகுந்த நேரத்தில் உரிய நீதி கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதனடிப்படையில், கொல்கத்தாவிலுள்ள வைத்தியர்கள் தொடர் போராட்டமாக பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் இன்று (11) ஐந்து மணிக்கு முன்பதாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவ்வாறு பணிக்கு செல்வோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.அத்தோடு, இதனை மேற்கு வங்க அரசு உறுதி செய்ய வேண்டுமென்றும் மற்றும் போராட்டத்தில் ஈடுபடும் வைத்தியர்களை பணி இட மாற்றம் செய்ய கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கொல்கத்தா காவல்துறை இருப்பினும், தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தமது போராட்டம் ஓயாது என வைத்தியர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.இந்தநிலையில், கொல்கத்தா காவல்துறை ஆணையரை நீக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் ஆகியோரை மாலை ஐந்து மணிக்கு பணி நீக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவித்திருந்தனர்
இருப்பினும், வைத்தியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமையினால் போராட்டம் தொடர்ந்துள்ளது.மேலும், சம்பவத்தில் கைதான மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷிற்கு நீதிமன்ற காவல் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post