பிரசாந்தின் திருமணம்தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோவாக இருந்தவர் பிரசாந்த். இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர். இவர் ஜோடி, ஜீன்ஸ் உள்ளிட்ட பல ஹிட்டான படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.இந்த நிலையில், சினிமாவில் இருந்து விலகி இருந்த பிரசாந்த் தனது தந்தை தியாகராஜனின் தயாரிப்பில், சமீபத்தில் வெளியான அந்தகன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தியாகராஜன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.
அந்த பேட்டியில், பிரசாந்தின் திருமணம் எப்போது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, விரைவில் பிரசாந்தின் திருமணம் நடைபெறும் எனவும், அதற்கான பணிகளில் நானும் பிரசாந்த் அம்மாவும் ஈடுபட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், என் மகனை குழந்தை போல் பார்த்து கொள்ளும் ஒரு அழகான குடும்ப பெண் போதும் என்றும், வேலைக்கு செல்லும் மற்றும் சோசியலிஸ்ட் பெண்கள் வேண்டாம் எனவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
Discussion about this post