மலையாளத்தில் காஸ்டிங் கவுச்சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் ஹேமா கமிஷன் வெளியிட்டு புதிய அறிக்கையில் மலையாள சினிமா குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
233 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், மலையாளத்தில் காஸ்டிங் கவுச், ஒரு பெரிய பிரச்சனையாகவே இருப்பதாகவும் பெண்கள் மீதான சுரண்டலுக்கு வழிவகுப்பதாகவும் வேலை வேண்டும் என்றால் அதற்கு ஈடாக பாலியல் ரீதியான பிரச்சனையை தாங்கள் சந்திப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.17 டேக்குகள் எடுத்த நடிகர்அப்படி ஒரு நடிகை, கட்டிப்பிடிக்கும் சீனில் நடிக்க வேண்டும் என ஹீரோ ஒருவர் கட்டாயபடுத்தி பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த சீன் தனக்கு சாதகமக பயன்படுத்தி கொண்ட அந்த நடிகர் 17 டேக்குகள் வாங்கினாராம்.
இந்த விவகாரத்தில் நடிகரை திட்டாமல் நடிகையை இயக்குநர் சரமாரியாக திட்டியதாகவும் நடிகை கூறியதை கேட்டு ஹேமா கமிட்டி அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பாலியல் ரீதியாக அடிபணியும் நபர்களுக்கு மட்டுமே நல்ல உணவு கிடைக்கும்.நிர்வாணமாக நடிக்க நடிகைகளுக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடியும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவ்வாறு நடிக்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர் என்றும் ஹேமா கமிட்ட அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Discussion about this post