கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் எதிர்பாராத விதமாக இனரீதியான தாக்குதலுக்குள்ளானார்.ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய மாணவரான தரன்பிரீத் சிங் (21), தனது உறவினர் மற்றும் நண்பர் ஒருவருடன் கனடாவின் Newfoundland and Labrador மாகாணத்திலுள்ள Sunshine Rotary Park என்னும் பூங்காவிற்குச் சென்றுள்ளார்.அப்போது, வெள்ளையர் ஒரு ஒரு பெரிய நாயுடன் அங்கு வந்துள்ளார். இந்த மாணவரையும் அவருடன் இருந்தவர்களையும் பாகிஸ்தானியர் என எண்ணிக்கொண்ட அந்த நபர், உங்களைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது, என் நாடு முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டீர்கள் என்று சத்தமிட்டிருக்கிறார்.
ஈரான், ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தானில் என்போல வெள்ளையர்களைப் பார்க்கமுடியுமா என அவர் கேட்க, நாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று கூறியிருக்கிறார் சிங்.
உடனே அந்த நபர், நீங்களெல்லாம் ஒரே ஆட்கள்தான், நீங்கள் கனேடியர்கள் இல்லையே என்று கூறி மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.
நீங்களெல்லாம் கனடா அரசின் பணத்தை செலவு செய்கிறீர்கள் என்று அவர் கூற, உடனே சிங், இல்லை, நாங்கள் கல்வி கற்பதற்காக 40,000 டொலர்களுக்கும் அதிகமாக கட்டணம் செலுத்தித்தான் கனடா வந்திருக்கிறோம் என்று விளக்கியிருக்கிறார்.
அந்த நபர் தொடர்ந்து சத்தமிட்டுக்கொண்டே இருக்க, சிங் நடப்பதை வீடியோ எடுப்பதைக் கவனித்த அந்த நபரின் நண்பர் அவரை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.இந்த சம்பவம் ஏற்படுத்திய நடுக்கத்தால், அன்று இரவு எங்களால் சாப்பிட முடியவில்லை என்கிறார் சிங்.எச்சரிக்கைஇந்த விடயம் குறித்து தன் குடும்பத்தினரிடம் கூட தெரிவிக்கவில்லை சிங். என்றாலும், தன்னைப்போல கனடாவுக்கு வரும் இந்தியர்களை எச்சரிக்கும் வகை.
கனடாவில் இரண்டு ஆண்டுகளாக தங்கியிருக்கிறேன். என் வீட்டை நான் இதுவரை மிஸ் பண்ணியதில்லை, அந்த சம்பவம் நடந்த அன்று என் வீட்டை ரொம்பவே மிஸ் பண்ணினேன் என்கிறார் சிங்.
Discussion about this post