சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு என்றே தனி ஒரு மார்க்கெட் உலகம் முழுவதிலும் இருக்கிறது. அவருடன் நடிக்கவும் ஜோடி சேரவும் பல கலைஞர்கள் காத்திருப்பார்கள் எக்கச்சக்கம் தான். ஆனால் அவர் நடித்து வெளியாகும் படத்திற்கு போட்டிபோட்டு தங்களின் படங்களை ரிலீஸ் செய்ய பலர் அஞ்சுவார்கள். அப்படி ரஜினிகாந்த் படம் ரிலீஸ் செய்யும் போது மோதிக்கொண்ட படங்களின் கதி என்ன என்று இந்த பதிவில் பார்ப்போம்..
நடிகர் பாக்யராஜ், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தினை நடிகர் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் படம் மோதியது. ஆனால் இரு படமே ஃபிளாப்பில் முடிந்தது. ரஜினியின் முத்து படத்துடன் சத்யராஜின் ரகசிய போலீஸ் மோதியதில் அப்படம் மிகப்பெரிய தோல்வி. ராம்கியின் தாலி புதுசு படம் ரஜினியின் அருணாச்சலம் படத்துடன் மோதி தோற்றது.ரஜினியின் படையப்பா படத்துடன் விஜயகாந்த், சூர்யா நடித்த பெரியண்ணா படம் மோதி ஒருசில படங்களில் வெற்றி பெற்றும் படையப்பா அளவிற்கு சரியாக செல்லவில்லை. டி ராஜேந்தரின் மோனிஷா என் மோனாலிசா படமும் படையப்பா படத்துடன் மோதி தோல்வி கண்டது. பார்த்திபன் நடித்த இவண் படம் ரஜினியின் பாபா படத்துடன் மோதி தோல்வியடைந்தது.
அதேப்பொல் சந்திரமுகி படத்துடன் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் மோதி தோல்வி கண்டது. விஜய்யின் சச்சின் படமும் ரிலீஸ் ஆகி தோல்வியடைந்தது. ரஜினியின் குசேலன் அப்டத்துடன் மைக் மோகன் நடித்த சுட்டபழம் ரிலீஸ் ஆகி படுதோல்வியானது. ரஜினியின் பேட்ட படத்துடன் அஜித்தின் விஸ்வாசம் படம் மோதி வெற்றிப்பெற்றது. பேட்ட ஓரளவிற்கு வரவேற்பு பெற்றாலும் விஸ்வாசம் நல்ல வரவேற்பும் பெற்றது.ரஜினியின் தர்பார் படத்துன் தனுஷின் பட்டாஸ் படம் ரிலீஸ் ஆகி தோல்வியடைந்தது. ரஜினியின் அண்ணாத்த படத்துடன் விஷாலின் எனிமி படம் வெளியாகி இரு படமும் தோல்வியடைந்தது. ரஜினியுடன் மோதியதில் அஜித் மட்டுமே தப்பித்து இருக்கிரார்.தற்போது ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துடன் சூர்யாவின் கங்குவா படம் ஒரே நாளில் வெளியாகி மோதவிருக்கிறது. பல கோடியில் உருவாகியுள்ள கங்குவா, ரஜினியின் வேட்டையன் படத்துன் மோதி வெற்றி பெருமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்றியிருக்கிறது.
Discussion about this post