இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐஎன்எஸ் தபார் கப்பல் நான்கு நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கப்பல் நேற்றைய தினம் (08) லண்டன் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
இதன்போது, ஐஎன்எஸ் தபார் கப்பலை வரவேற்பதற்காக அங்கு குவிந்திருந்த இந்திய மக்கள் இதனை கொண்டாடி உற்சாகமடைந்துள்ளனர்.
இந்திய கடற்படையும் ராயல் கடற்படையும் வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் முகமாக சமீபத்திய தசாப்தங்களில் இயங்கி வருகின்றன.
இதன்படி, இரு தரப்பிலிருந்தும் கப்பல்கள் தொடர்ந்து பரஸ்பர நாடுகளுக்குச் சென்று வருவதுடன் மேலும் பல்வேறு கடற்படைப் பயிற்சிகளிலும் ஒன்றாகப் பங்கேற்று வருகின்றன.
அதேவேளை, கடந்த பல வருடங்களாக ஆண்டுதோறும் நடைபெறும் கொங்கன் எனப்படும் இருதரப்பு கடற்படை பயிற்சிக்காகவும் இரு நாட்டு கடற்படைகளும் நீண்டகால கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன.
இந்நிலையில், ஐஎன்எஸ் தபார் கப்பலின் பணியாளர்கள் ராயல் இராணுவத்தின் ஓய்வு பெற்றவர்கள் தங்கி இருக்கும் முதியோர் இல்லத்தில் சமூக சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் இது பிரதமர் நரேந்திர மோடியின் வசுதைவ குடும்பகம் என்ற கொள்கையை பிரதிபலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post