மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் நாளை வெளியாகயிருக்கிறது. இந்த படகில் சிறப்பு கேமியோ ரோலில் பிரபல நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சரத்குமாரும் கலந்துகொண்டார்.அதில் பேசிய அவர், வரலட்சுமி திருமணம் தொடர்பாக ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பி இருக்கிறது. திருமண உறவில் ஏன் விரிசல் வருகிறது? யாருக்கு யாருடன் ரிலேஷன்ஷிப் ஒத்துப் போகிறது? .இதற்கான காரணங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். தேவையில்லாமல் அதை பற்றி கமெண்ட் செய்வது மோசமாக பேசுவது எல்லாம் தவறான செயல்.மீனா பற்றி எப்படி தப்பா பேசலாம். இப்படி பேசுபவர்களிடம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவது மிகவும் தவறான விஷயம். அரசு நினைத்தால் இப்படி பேசுபவர்களை ஓவர் நைட்டில் கட்டுப்படுத்தலாம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் நடிகை மீனா, அரசியல் பிரமுகர் ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் போன்ற இணையத்தில் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post