தலவாக்கலை (Talawakelle) – பெரிய மிலகுசேனை தோட்ட லயன் குடியிருப்பில் பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து நேற்று (04) இரவு 08 மணியளவில் பதிவாகியுள்ளது.
மின் கசிவின் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணை
லயன் இலக்கம் ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், 03 வீடுகள் முழுமையாகவும் மேலும் சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.
கிராம மக்களின் முயற்சியினால் ஒரு சில மணிநேரங்களில் தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
உடைமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதோடு உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post